கட்சிக்காகவும் ராஜபக்ச ஆட்சிக்காகவும் கடுமையாக உழைத்த தமக்கு அமைச்சுப் பதவியொன்று கிடைத்தாக வேண்டும் என கடுமையான ஆதங்கம் வெளியிட்டுள்ளார் மாத்தளை மாவட்ட பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன திசாநாயக்க.
மஹிந்த ராஜபக்சவை மீண்டும் ஆட்சியலமர்த்துவதற்காகத் தாம் பெரும் பாடு பட்டதாகவும் பெரமுனவை வளர்த்தெடுப்பதில் தனது பங்கு அளப்பரியது எனவும் தெரிவிக்கும் அவர், தற்போதைய சூழலில் தமக்கு அமைச்சுப் பதவியொன்று கட்டாயம் தேவைப்படுவதாகவும் ஊடக சந்திப்பொன்றை நடாத்தி ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
அஜித் நிவாத் கப்ராலுக்கு வழங்கப்பட்டிருந்த இராஜாங்க அமைச்சு அவரது இராஜினாமாவைத் தொடர்ந்து முற்றாக இல்லாதொழிக்கப்பட்டு பசில் ராஜபக்சவின் பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment