சதொச பூண்டு ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர்கள் நால்வரும் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் நுகர்வோர் அதிகார சபை பிரதானி வெளியிட்டிருந்த தகவலின் பின்னணியில் விசாரணைகள் நடாத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு விட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து பிணை வழங்கப்பட்டுள்ளது.
வெலிசர மொத்த விற்பனை நிலையத்தின் முகாமையாளர் தரத்தில் உள்ள நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment