தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் ஒன்று இடம்பெற்றால் ஆளுங்கட்சியான பெரமுன தோல்வியுறுவது நிச்சயம் என அண்மையில் ராஜபக்ச குடும்பத்தின் வாரிசுகளுள் ஒன்றாகக் கருதப்படும் சஷீந்ர ராஜபக்ச தெரிவித்திருந்த நிலையில், அதற்கு மாற்றமாக கருத்து வெளியிட்டுள்ளார் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ.
அவரது கூற்றின் படி, எதிர்க்கட்சிக்கு வாக்களித்த மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாகவும் பெரமுனவின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ச அதிகாரமற்ற 'பொம்மை' நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டதாக விமல் கூட்டணி பிரளயத்தில் ஈடுபட்டுள்ளதுடன் பெரமுனவுக்குள் தொடர்ந்தும் பசில் தரப்புடனான அதிகார முறுகல்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment