ஜனாதிபதியின் கோபத்தையும் மீறி இறக்குமதி: மஹிந்தானந்த - sonakar.com

Post Top Ad

Thursday, 21 October 2021

ஜனாதிபதியின் கோபத்தையும் மீறி இறக்குமதி: மஹிந்தானந்த

 


ஜனாதிபதியின் கோபத்தையும் மீறியே அரிசி, பால்மா மற்றும் இதர பொருட்களும் இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவிக்கிறார் மஹிந்தானந்த அளுத்கமகே.


நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த அவர், மக்களின் உணவுத் தேவையை தீர்ப்பதற்கு இறக்குமதியைத் தவிர வேறு வழியில்லையென விளக்கமளித்துள்ளார்.


இதேவேளை, உள்நாட்டு விவசாயிகள் அமைச்சரின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் அளவுக்கு அரசின் கெடுபிடிகளால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment