மத்திய வங்கி ஆளுனர் பதவிக்கு அமைச்சரவை அந்தஸ்தை வழங்க தீர்மானித்துள்ளது அரசாங்கம்.
இராஜாங்க அமைச்சராக இருந்த கபரால், தனது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனத்தையும் துறந்து மத்திய வங்கி ஆளுனராக பதவியேற்றிருந்தார். அவரது அமைச்சு பதவி முழுமையாக நீக்கப்பட்டு நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் தற்போது மத்திய வங்கி ஆளுனர் பதவிக்கு கபினட் அந்தஸ்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் பதவி முன்னுரிமை வரிசையில் அமைச்சர்களுக்கு நிகரான பதவியாக மத்திய வங்கி ஆளுனர் திகழ்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment