சிறைச்சாலைக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் சிறைக்கைதிகள் புனர்வாழ்வுக்கான இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு எதிரான விசாரணையைத் துரிதப்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
அநுராதபுர சிறைக்கைதிகள் எண்மரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கின் பின்னணியிலேயே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் என்ற வகையில் சிறைகளுக்குச் செல்லும் அதிகாரம் தனக்கிருந்ததாக தெரிவித்த லொஹான், தனது தோழிகளுடன் சிறைகளுக்குச் சென்று அடாவடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள நிலையில் அதற்கான இராஜாங்க அமைச்சுப் பொறுப்பிலிருந்து விலகியுள்ளமையும் தான் நிரபராதி என தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment