நாட்டுக்கான சட்டத்தைத் தீர்மானிக்கவன்றி தனக்கு 'அறிவுரை' வழங்கவே ஞானசாரவை ஒரே நாடு - ஒரே சட்ட செயலணியின் தலைவராக நியமித்துள்ளதாக விளக்கமளித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
ஆளுந்தரப்பின் கூட்டணிக் கட்சிகளுடனான சந்திப்பில் வைத்து இது தொடர்பில் வினவப்பட்ட போதே ஜனாதிபதி இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
தனது செயற்பாடுகளுக்கெல்லாம் கூட்டணிக் கட்சிகளிடம் ஆலோசனை கேட்கச் சென்றால் தனக்கு நண்பர் ஒருவர் கூட இல்லாமல் போய்விடும் எனவும் இதன் போது ஜனாதிபதி விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment