சட்டங்கள் நாடாளுமன்றில் இயற்றப்படாமல் வேறு எங்கோ உருவாக்கப்பட்டு, அதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் மாத்திரமே தற்போதைய நாடாளுமன்ற (ஆளுங்கட்சி) உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவதாக விசனம் வெளியிட்டுள்ளார் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த.
1982ம் ஆண்டு சட்டப் பட்டப்படிப்பை நிறைவு செய்த தான் இன்று நாடாளுமன்றில் பொம்மை போன்று சொல்வதற்கெல்லாம் கை தூக்க வேண்டியிருப்பதாக அவர் விசனம் வெளியிட்டுள்ளதுடன் அவ்வாறாயின் நாடாளுமன்றம் எதற்கு? என கேள்வியெழுப்பியுள்ளார்.
இதேவேளை, அமைச்சரவையிலும் சம்பிரதாயத்துக்காக பத்திரங்கள் தரப்பட்டு அதை வாசிப்பதற்குள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக அறிவிக்கப்படுவதாக அண்மையில் விமல் வீரவன்சவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment