கெரவலபிட்டிய யுகதனவி மின் நிலையத்தின் 40 வீத பங்குகள் அமெரிக்க நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதை எதிர்த்து கார்டினல் மல்கம் ரஞ்சித் மற்றும் எல்வே குணவன்ச தேரர் அடிப்படை உரிமை வழக்கொன்றினை தாக்கல் செய்துள்ளனர்.
சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் குறித்த 'டீல்' நாட்டின் வளத்தை சுரண்ட அனுமதிக்கும் செயல் என விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் உச்ச நீதிமன்றில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சிக்குள்ளும் இவ்விவகாரம் பாரியல சலசலப்பை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment