வருமானப் பற்றாக்குறையால் திண்டாடும் அரச தொலைக்காட்சி சேவையான ரூபவாஹினியின் ஊழியர்கள் நிறுவனத்தின் தவிசாளரது அறையை முற்றுகையிட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
திறைசேரியிலிருந்தும் நிறுவனத்துக்கு போதிய நிதி வழங்கப்படாத நிலையில் நாளையும் ஊதியம் கிடைக்குமா என்ற சந்தேகம் நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பணிப்பாளர் நாயகம் ஜயம்பதி பண்டார அலுவலகம் வராத நிலையில் தவிசாளர் ரெஜினோல்ட் குரேயின் அலுவலகம் முற்றுகையிடப்பட்டு ஊழியர்கள் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளமையும் 2014 பொதுத் தேர்தல் காலத்தில் தற்போதைய பிரதமர் சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு பெருந்தொகை 'கடன்' நிலுவையில் வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment