உத்தம நபியின் உதயதின விழாவினை முன்னிட்டு கல்முனை பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அகில உலக்தார்கோர் அருட்கொடை அண்ணலெம் பெருமானர் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் புனித மீீலாத் தினத்தை முன்னிட்டு மாபெரும் மீலாாத் ஊர்வலம் இன்று செவ்வாய்க் கிழமை ரபியுல் அவ்வல் பிறை 12 (19.10.2021) கல்முனை, சாய்ந்தமருது மற்றும் கல்முனைக்குடி பிரதேசங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வின் போது மௌலிது ஷரிப் ஓதப்பட்டு இலங்கை நாட்டினதும் உலக வாழ் மக்களினதும் தேகாரோக்கியத்துக்காகவும், கொடிய கொரோனா நோயிலிருந்தும் விடுபட விஷேட துஆப் பிராத்தனையும் செய்யப்பட்டது.
இதன் போது வீதியின் இரு ஓரங்களிலும் அன்னதானம் வழங்குவதில் மக்கள் மும்மூரமாக ஈடுபட்டமையை காணக்கூடியதாக இருந்தது.
2021 தேசிய மீலாத் தின விழா இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- யூ.கே.காலித்தீன்
No comments:
Post a Comment