2007ம் ஆண்டு, அண்ணல் நபி (ஸல்) அவர்களை கார்டூன் வரைந்து உலகளாவில் பாரிய எதிர்ப்பலையை உருவாக்கிய சுவீடன் ஓவியர் லார்ஸ் வில்கஸ் வாகன விபத்தில் மரணித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு 24 மணி நேரமும் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், பொலிசாருடன் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியே உயிரிழந்துள்ளதாக சுவீடன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டென்மார்க்கில் உருவான கார்டூன் சர்ச்சையையடுத்து குறித்த நபரும் கார்டூன் வரைந்து சர்ச்சையை உருவாக்கியிருந்த அதேவேளை சுவீடன் பிரதமர் முஸ்லிம் நாடுகளுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நிலைமையை சமாளித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment