நீதிமன்ற உத்தரவு எதுவும் இல்லாமல் 2018 - 2019 காலப்பகுதியில் தனது வட்சப் உரையாடல்களை சி.ஐ.டியினர் ஒட்டுக் கேட்டுள்ளதாகவும் இதனூடாக தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.
இஸ்ரேலிய நிறுவனம் ஒன்றினால் உருவாக்கப்பட்ட செயலியொன்று ஊடாக உலக தலைவர்களின் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டிருப்பது போல இலங்கை அரசும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகிறதா என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்துடன் தனக்குத் தெரியாமல் தனது விபரங்களை சி.ஐ.டியினருக்கு வழங்கிய தொலைபேசி நிறுவனத்துக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப் போவதாக அவர் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment