அதிகார துஷ்பிரயோகம் உச்ச கட்டம்: கம்மன்பில குமுறல்! - sonakar.com

Post Top Ad

Saturday, 30 October 2021

அதிகார துஷ்பிரயோகம் உச்ச கட்டம்: கம்மன்பில குமுறல்!

 


இதற்கு முன்னர் பிரேமதாச, சந்திரிக்கா மற்றும் ரணில் யுகத்தில் இல்லாத அளவுக்கு தற்போதைய ஆட்சியில் அதிகார துஷ்பிரயோகம் உச்ச கட்டத்தில் இருப்பதாக விசனம் வெளியிட்டுள்ளார் உதய கம்மன்பில.


கெரவலபிட்டிய, யுகதனவி இயற்கை எரிவாயு தயாரிப்பினை எதுவித கேள்வியும் இல்லாது முறையற்ற விதத்தில் பசில் ராஜபக்ச தரப்பு அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியிருக்கின்றமை தொடர்பில் விமல் - கம்மன்பில கூட்டணி எதிர்த்து வருகிறது.


இப்பின்னணியில், அரசின் அதிகார துஷ்பிரயோகங்ள் தொடர்பில் விமல் வீரவன்ச, கம்மன்பில மற்றும் பங்காளிகள் வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment