கெரவலபிட்டிய யுகதனவி மின் நிலையத்தின் பங்குகள் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் விமல் - கம்மன்பில கூட்டணிகள் தொடர்ந்து தமது எதிர்ப்பினை வெளிக்காட்டி வருகின்றனர்
இதன் தொடர்ச்சியில் எதிர்வரும் 29ம் திகதி தேசிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை நடாத்தப் போவதாக குறித்த அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கம்யுனிஸ்ட் கட்சி உட்பட விமல் கூட்டணியில் உள்ள பங்காளிகள் இதில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.தே.க அரசின் போது இவ்வாறு இடம்பெற்றால் மாத்திரம் அது தவறு என்றும் பெரமுன விரும்பினால் அமெரிக்காவுக்கு விற்பனை செய்யலாம் என கண்டும் காணாமல் இருப்பதும் ஏற்புடையது இல்லையெனவும் தாய் தந்தையர் பிழை செய்தாலும் தட்டிக் கேட்க வேண்டியுள்ளதாகவும் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.
இதேவேளை, விமல் - கம்மன்பில கூட்டணியினருடனான பசில் - வியத்மக பனிப்போர் பெரமுனவுக்குள் வலுப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment