மக்களின் துன்பம் அரசாங்கத்துக்கு நன்கு தெரியும் என்கிறார் அமைச்சர் உதய கம்மன்பில. இதனாலேயே உலகின் பெரும்பாலான நாடுகளில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும் இலங்கையில் அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லையென்கிறார்.
உலக சந்தையின் விலையேற்றத்துக்கு ஈடு கொடுக்க இலங்கையிலும் எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், கடந்த தடவை விலையதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள அரசியல் பின்னடைவை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையிலுள்ள அரசு, இம்முறை தயக்கம் காட்டி வருகிறது.
இந்நிலையில், தொடர்ந்தும் பெற்றோல் மற்றும் டீசல் நஷ்டத்திலேயே விற்பனை செய்யப்பட்டு வருவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment