சுமார் ஒரு வருட காலத்தின் பின் பங்களதேஷிலிருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
முதற்தொகுதியாக 50 பேர் இன்று கட்டுநாயக்க விமான நிலையம் வந்து சேர்ந்த நிலையில் சம்பிரதாயபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கு உதயங்க வீரதுங்க மீண்டும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் ஏனைய நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கு சுற்றுலாத்துறை அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment