தெற்காசிய பிராந்தியத்தின் பழமையான ஜனநாயக நாடு இலங்கையெனவும் இங்கு ஒரு போதும் சர்வாதிகாரம் இருந்ததில்லையெனவும் ஐரோப்பிய யூனியனுக்கு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
அதிகார துஷ்பிரயோகம், நிர்வாக குழறுபடிகள் நாட்டில் அதிகரித்துள்ள நிலையில், நேற்றைய தினம் தன்னை சந்தித்த ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகளிடம் இவ்வாறு தெரிவித்துள்ள அவர், எந்த ஒரு கால கட்டத்திலும் சர்வாதிகார பிடிக்குள் இலங்கை இருந்ததில்லையென விளக்கமளித்துள்ளார்.
நடைமுறை அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஆட்சியில் குறைக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் சர்வாதிகார வலிமையை அதிக அதிகாரத்துடன் மீள உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment