மாகாணங்களுக்கிடையில் பிரயாணிப்பதற்கு தற்போது அமுலில் இருப்பதாக கூறப்படும் கட்டுப்பாடுகள் ஒக்டோபர் 21ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நிமித்தம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருந்ததாக கூறப்பட்ட போதிலும் மக்கள் நடமாட்டம் வெகுவாகக் காணப்பட்ட நிலையில் மேலும் ஒரு கொரோனா அலை தொடர்பில் அச்சம் வெளியிடப்பட்டு வந்திருந்தது.
எனினும், தற்சமயம் தினசரி கொரோனா தொற்றாளர் மற்றும் மரண எண்ணிக்கை, அரசாங்க தகவல்களின் அடிப்படையில் குறைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment