நடைமுறை ஆட்சியாளர்களை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்கு தாம் போன்ற சக்திகள் செய்த தியாகங்கள் வீண் விரயமாகிப் போய், நாடு 'வேறு' யாருடையதோ தேவைக்காக நாசமாக்கப் பட்டுக் கொண்டிருப்பதாக விசனம் வெளியிட்டுள்ளார் அபயராம முருத்தெட்டுவே தேரர்.
கோட்டாபே ராஜபக்ச ஜனாதிபதி பதவியை சரிவரப் பயன்படுத்தி, எதிர்பார்த்த பணிகளை செய்யவில்லையென தெரிவிக்கும் அவர், வேறு நபர்களின் ஆளுமைக்குட்பட்டு நாட்டை நாசமாக்க அனுமதித்திருப்பதாகவும், இந்த பின்னணியில் ராஜபக்சக்களின் சாம்ராஜ்யம் முடிவை நெருங்கியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
இன்றைய சூழ்நிலையில் மக்கள் 200 வீத அதிருப்தியில் வாழ்வதாகவும் மஹிந்த ராஜபக்ச நிலைமையை சீர் செய்ய முன் வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment