ஒமானிடமிருந்து ஐந்து வருட சலுகை அடிப்படையிலான 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்க அரசு பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாகவும் அது கிடைக்கப் பெறாவிட்டால் எரிபொருள் விலையுயர்வு தவிர்க்க முடியாததாகி விடும் எனவும் தெரிவிக்கிறார் அமைச்சர் உதய கம்மன்பில.
மாற்றீடாக திறைசேரியிலிருந்து சலுகை கிடைக்க வேண்டும் எனவும் நாட்டின் பொருளாதார சூழ்நிலை அதற்கு ஏதுவாக இல்லையெனவும் அவர் தெரிவிக்கிறார்.
தற்சமயம் பெற்றோல் லீற்றர் ஒன்றுக்கு 15 ரூபா மற்றும் டீசலுக்கு 16 ரூபா இழப்பை அரசாங்கம் சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment