ராஜபக்சக்களின் உதவியால் தான் எங்கும் சொத்து சேர்க்கவோ காணிகளை வளைத்துப் போடவோ இல்லையென அறிக்கை வெளியிட்டுள்ளார் அத தெரண தலைவர் திலித் ஜயவீர.
பன்டோரா பேப்பர்ஸ் ஊடாக ஜனாதிபதி - பிரதமரின் உறவினரும் முன்னாள் பிரதியமைச்சருமான நிருபமா ராஜபக்ச சொத்துச் சேகரிப்பு மற்றும் மறைமுக வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ள விவகாரம் வெளியாகியுள்ள நிலையில் திலித் இவ்வாறு தன்நிலை விளக்கமளித்துள்ளார்.
ஜனாதிபதியின் மிக நெருங்கிய நண்பர்களுள் ஒருவராகவே கருதப்படும் திலித் பெரமுன ஆட்சியமைப்பு மற்றும் இனவாத தூண்டல் ஊடாக தமது ஊடக ஊடக வலையமைப்பிற்கு 'கொளுத்த' இலாபமீட்டிக் கொண்டவர் என சமூக மட்டத்தில் நம்பிக்கை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment