இலங்கையில் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முன் வந்தாலும் அதை செயற்படுத்த வேண்டுமானால் அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் மற்றும் கொமிசன் கொடுக்க வேண்டியுள்ளதால் பலர் பின் வாங்குவதாக தெரிவிக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன்.
தம்மை சந்தித்த பல இந்திய தொழிலதிபர்கள் இவ்வாறு தன்னிடம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் விளக்கமளித்துள்ளார். இதேவேளை, பல நாடுகளிடம் இலங்கை கடன் கேட்டு முயற்சி செய்து வருகின்றது.
அண்மையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணியொருவர் 5 மணி நேரம் அனுபவித்த இன்னலையடுத்து தனது பயணத்தை துருக்கிக்கு மாற்றி அங்கிருந்து காணொளி வெளியிட்டிருந்தமை பரபரப்பை உண்டாக்கியிருந்த அதேவேளை சுற்றுலாத்துறையிலேயே அரசு பெரிதும் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment