பெரமுன தேர்தல் பிரச்சாரக் கருப்பொருளான ஒரே நாடு - ஒரே சட்டத்திற்கான செயலணியின் பிரதானியாக ஞானசார நியமிக்கப்பட்டிருப்பது அரசியல் பேசு பொருளாகியுள்ள நிலையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது பங்கிற்கு அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியில் நீதியமைச்சர் அலி சப்ரியும் தமது 'அதிருப்தியை' வெளியிட்டுள்ளார். ஞானசார இதன் தலைவராக இயங்குவது குறித்த செயலணியின் 'நீதியான' நடவடிக்கைகளை பாதிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், குறித்த செயலணியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் ஞானசாரவின் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளதுடன் அதற்கு விளக்கங்களும் அளித்து வருவதுடன், ஜனாதிபதியின் நியமனத்துக்கு வெளியில் எதிர்ப்பு வெளியிடும் அனைவரும் தமது பதவிகளில் மிகவும் கவனமாக இருப்பதாக சமூக மட்டத்தில் கருத்துப் பகிர்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment