பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை குற்றவாளியாக்குவதற்கான முயற்சியாக சந்தேக நபராக கைது செய்யப்பட்ட ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள முஹமத் சுல்தான் என அறியப்படும் குறித்த நபர் நேரடியாக மன்றில் ஆஜராகி இதனை தெரிவித்துள்ளதுடன் சித்திரவதை செய்த மூன்று அதிகாரிகளின் பெயர்களையும் வழங்கியுள்ளளார்.
எனினும், சுல்தானுக்கு பிணை வழங்க மறுத்த நீதிமன்றம் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment