கடன் 'தகுதி' குறைப்பு; மூடியுடன் இலங்கை முறுகல்! - sonakar.com

Post Top Ad

Friday, 29 October 2021

கடன் 'தகுதி' குறைப்பு; மூடியுடன் இலங்கை முறுகல்!

 


இலங்கை அரசின் கடன் பெறும் தகுதியைக் குறைத்துள்ள சர்வதேச தகுதிக் கணிப்பு நிறுவனமான மூடியின் முடிவை ஏற்கப் போவதில்லையென மறுப்பு வெளியிட்டுள்ளது கபரால் ஆளுனராக இருக்கும் மத்திய வங்கி.


CAA1 தரத்திலிருந்து CAA2 தரத்துக்கு இலங்கையின் கடன் பெறும் தகுதி குறைக்கப்பட்டுள்ளதுடன் நிலுவையில் உள்ள கடந்த கால கடன்களைச் செலுத்துவதற்கான ஆயத்த நிலையோ, போதிய அன்னியச் செலாவணியோ இல்லாத சூழ்நிலையிலேயே இலங்கையின் நிதி நிலைமை உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எனினும், குறித்த நிறுவனத்தின் கணிப்பு தவறானது எனவும் வரவு-செலவுத் திட்டம் முன் வைக்கப்படவுள்ள நேரத்தில் தவறான வகையில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கபராலின் நிர்வாகம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment