அசாத் சாலிக்கு எதிராக குற்றப்பத்திரிகை கையளிப்பு - sonakar.com

Post Top Ad

Monday, 25 October 2021

அசாத் சாலிக்கு எதிராக குற்றப்பத்திரிகை கையளிப்பு

 


கடந்த மார்ச் மாதம் செய்தியாளர் சந்திப்பொன்றில் வைத்து நாட்டின் இறையான்மையை பாதிக்கும் வகையில் உரையாற்றியதாக குற்றஞ்சாட்டப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் ஆளுனர் அசாத் சாலிக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது.


குறித்த விவகாரத்தை விசாரித்திருந்த மஜிஸ்திரேட் நீதிமன்றம், திரிபுபடுத்தப்பட்டு ஒளிபரப்பப்பட்ட காட்சிகளினாலேயே அவரது பேச்சு அவ்வாறான தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளதாகவும் முழுமையான காணொளியில் நாட்டின் ஒற்றுமைiயே வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பு வழங்கியிருந்தது.


எனினும், மேல் நீதிமன்றமே பிணை தொடர்பில் தீர்மானிக்க வேண்டியுள்ள நிலையில், இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த போதிலும் வழக்கின் விசாரணையை நவம்பர் 2ம் திகதிக்கு தள்ளி வைத்துள்ள நீதிமன்றம் சாட்சிகளுக்கும் அழைப்பாணை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment