இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று அம்பாரை மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தார்.
அவர் திருக்கோயில், சாய்ந்தமருது, மருதமுனை ஆகிய இடங்களுக்கு இன்று விஜயம் செய்தார்.
அதற்கு அமைவாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று (13) காலை 11.00 மணியளவில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது தொழிற் பயிற்சி நிலையத்திற்கு பொதுஜன பெரமுனவின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் றிஸ்லி முஸ்தபாவின் அழைப்பின் பேரில் வருகை தந்தார்.
அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது தொழிற் பயிற்சி நிலையத்தினை பார்வையிட்டதுடன், அங்கு காணப்படும் குறைகளையும் அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இங்கு காணப்படும் குறைகளை இல்லாமல் செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அத்தோடு, கொரிய மொழி, ஜப்பான் போன்ற மொழிகளை கற்பிப்பதற்குரிய நடவடிக்கைகளும், அதற்குரிய ஆளணி தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
இன்நிகழ்வில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் கப்பல் துறைமுக பிரதி அமைச்சருமான எஸ். றிகான், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் கங்கா சாகரிக்கா, சாய்ந்தமருது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தொழிற் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி எம்.ரி.எம். ஹாறுன் ஆகியோரோடு அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
- யூ.கே. காலித்தீன்
No comments:
Post a Comment