இலங்கையில் மாடறுப்புக்கான தடையை அமுல் படுத்துவதன் பின்னணியில் 2020 செப்டம்பரில் அமைச்சரவை இணங்கியிருந்த நிலையில் அதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச தலைமையில் கூடிய அமைச்சரவையில் இம்முடிவு எட்டப்பட்டதாக அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளதுடன் இதனூடாக உள்நாட்டு விவசாயம் 'அபிவிருத்தி' காணும் என முன்னர் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, அமைச்சரவையில் வெறுமனே பெயருக்காகவே பத்திரங்கள் வழங்கப்படுவதாகவும் வாசிப்பதற்கு முன்பாகவே சட்டங்கள் நிறைவேற்றப்படுவதாகவும் அண்மையில் விமல் வீரவன்ச விசனம் வெளியிட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment