சமகி ஜன பல வேகயவிலிருந்து நீக்கப்பட்டுள்ள டயானா கமகே, நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர முடியாது என நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கெதிரான சட்ட நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக தெரிவிக்கிறார் டயானா.
கட்சியின் உரிமையாளர் தானே என டயானா தெரிவித்து வரும் நிலையில், கட்சியை அவர் ஏலவே விற்று விட்டார் என சமகி ஜன பல வேகய செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
எனினும், தாம் கட்சியை விற்கவில்லையெனவும் குத்தகைக்கே கொடுத்திருப்பதாகவும், அது தனக்கு மாத்திரமே தெரியும் எனவும் விளக்கமளித்துள்ள டயானா, ரஞ்சித் மத்தும பண்டாரவின் இரகசிய முகத்தையும் அம்பலப்படுத்தப் போவதாக தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment