நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 'பறித்து' வைத்திருக்கும் அத்துராலியே ரதன தேரரைக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது அபே ஜன பல கட்சி.
குறித்த கட்சிக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அபகரித்துக் கொண்ட ரதன தேரர் அக்கட்சியின் முன்னாள் செயலாளரை கடத்தியதாகவும் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. மறுமுனையில் ஞானசார தேரரும் அடாவடியில் ஈடுபட்டிருந்த போதிலும் ரதன தேரரே பலசாலியாக குறித்த பதவியைப் பெற்றிருந்தார்.
எனினும், ஆறு மாதங்களில் அவர் இராஜினாமா செய்வதாக வாக்குறுதியளித்திருந்ததாகவும் அந்த உடன்பாட்டிலேயே அவரை நியமித்திருந்ததாகவும் கட்சி சார்பில் தெரிவித்து வந்த அதேவேளை ஞானசாரவுக்கு நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டிருந்தது. எனினும், ரதன தேரர் விடாப்பிடியாக இருக்கும் நிலையில் அவரைக் கட்சியிலிருந்து நீக்கி விட்டதாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment