ஓகஸ்ட் மாத இறுதியோடு 70 பில்லியன் ரூபா நஷ்டத்தில் இயங்கி வரும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை மீளக் கட்டியெழுப்ப, எரிபொருள் விலையை உயர்த்த வேண்டும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு 500 மில்லியன் டொலர் கடன் கேட்டு எரிபொருள் அமைச்சர் கம்மன்பில மத்திய கிழக்கு உட்பட பல இடங்களில் முயற்சித்திருந்தும் இதுவரை பலன் கிடைக்காத நிலையில் எரிபொருள் விலையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மன்னாரில் உள்ளதாகக் கூறப்படும் எண்ணை வளத்தை உபயோகித்து நாட்டின் அனைத்து கடன்களை அடைக்கப் போவதாகவும் கம்மன்பில தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment