சிறுமி மரண விவகாரத்தின் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த விவகாரத்தின் பின்னணியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரிசாதின் மனைவி மற்றும் மாமனார் கடந்த தவணை விசாரணையின் போது பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் ரிசாதின் விளக்கமறியல் ஒக்டோபர் 14ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஈஸ்டர் விவகாரத்தில் சந்தேக நபராக்கப்பட்டு ஏலவே தடுத்து வைக்கப்பட்டுள்ள ரிசாத் பதியுதீன் இவ்விகாரத்திலும் சந்தேக நபராக்கப்பட்டு விளக்கமறியல் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment