2021ம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தர மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் மீண்டும் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நவம்பர் மாதம் நடாத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது அதற்கான சாத்தியம் இல்லையெனவும் இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் வினவிய போதே கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment