பெற்றோலியம் கூட்டுத்தாபனம் உலகமெல்லாம் தேடி வந்த 500 மில்லியன் டொலர் கடன் தொகையை இந்தியா வழங்கும் என்ற நம்பிக்கையில் காத்திருப்பதாக நிதியமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய நிறுவனங்களுக்கு இதற்கு முன்னர் நிலுவையில் உள்ள கடன்களைச் செலுத்தியதும் இத்தொகை கிடைக்கும் எஎன்ற நம்பிக்கையில் இவ்வாரம் 24 பில்லியன் ரூபா மீளச் செலுத்தப்பட்டிருப்பதாகவும் எதிர்வரும் வாரம் 1 வீத வட்டியின் அடிப்படையில் 500 மில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய கிழக்கு உட்பட பல நாடுகளிடம் உதய கம்மன்பில நேரடியாகக் கடன் கேட்டு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment