25ம் திகதி ஆசிரியர் - அதிபர் கடமைக்குத் திரும்புவர் - sonakar.com

Post Top Ad

Monday, 18 October 2021

25ம் திகதி ஆசிரியர் - அதிபர் கடமைக்குத் திரும்புவர்

  


21ம் திகதி முதல் 200க்குக் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளைத் திறப்பதற்கு அரசு ஆயத்தமாகி வரும் நிலையில் 25ம் திகதி முதல் ஆசிரியர் - அதிபர்கள் கடமைக்குத் திரும்பவுள்ளதாக அறிவித்துள்ளது தொழிற்சங்கம்.


ஆசிரியர் - அதிபர்களின் தொழிற்சங்க கூட்டணி இன்றைய தினம் கூடி இவ்வாறு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.


சம்பளப் பிரச்சினைக்கு, அரசு முன் வைத்த தீர்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்து தொடர்ச்சியாக ஆசிரியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment