ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தின் பின்னணியில் 24 பேருக்கு குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கான விசேட நீதிபதிகள் முன்நிலையில் நவம்பர் 23ம் திகதி முதல் விசாரணை ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த தலைமையிலான மூவர் கொண்ட விசேட நீதிபதிகள் குழு இவ்வழக்கினை விசாரிக்கவுள்ளது.
கொலை, ஆயுதம் வைத்திருந்தமை, ஆயுத கொள்வனவு, கொலை முயற்சி உட்பட 25 பேருக்கு எதிராக பொலிசாரால் 23,270 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment