இலங்கையில் இன்றைய தினம் 19 கொரோனா மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. இப்பின்னணியில் மொத்த எண்ணிக்கை 13,725 ஆக உயர்ந்துள்ளது.
தற்சமயம் தடுப்பூசிகளுக்குத் தாக்குப் பிடிக்கக்கூடிய புதிய வகை ஏ30 கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றைய அளவில் 13,638 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் அண்மைய மரணங்கள் பெரும்பாலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment