ராஜபக்ச குடும்பத்தினரே அடுத்த பதினைந்து வருடங்களுக்கு ஆட்சியாளர்கள் எனவும் அதனை இல்லாதொழிக்கும் சக்தி யாருக்கும் இல்லையெனவும் தெரிவிக்கிறார் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வா.
வீடமைப்பு அதிகார சபையின் பிரதானியான அவர், உரப் பிரச்சினை, ஆர்ப்பாட்டங்கள், ஆசிரியர் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் என பல பிரச்சினைகள் இருக்கின்ற போதிலும் இந்த அரசை 15 வருடங்களுக்கு அசைக்க முடியாது என அவர் விளக்கமளித்துள்ளார்.
எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக துமிந்த சில்வா போட்டியிடுவார் என பெரமுன தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment