இலங்கையில் கொரோனா தொற்று தீவிரத்தின் பின்னணியில் அங்கு பயணிப்பதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது அமெரிக்காவின் தொற்று நோய் தடுப்பு மற்றும் முகாமைத்துவ மையம்.
இலங்கையில் தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டும் தினசரி மரண பட்டியலில் நூற்றுக்கணக்கான மரணங்கள் இணைக்கப்பட்டும் வெளியிடப்படுகிறது. எனினும், உண்மையான தகவல்கள் மறைக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் விசனம் வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில், பல நாடுகள் இலங்கையைத் தொடர்ந்தும் 'சிவப்பு' பட்டியலில் வைத்துள்ளதுடன் இங்கிருந்து பயணிப்போர் பெரும் செலவில் தனிமைப்படுத்தலில் ஈடுபட வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment