சஜித் பிரேமதாசவின் சமகி ஜனபல வேகயவுக்குள் ஏற்பட்டுள்ள நிர்வாக அதிருப்தியை மூலதனமாகக் கொண்டு அங்கிருந்து சில உறுப்பினர்களை உள்வாங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சஜித் பிரேமதாசவுடன் நெருக்கமான முக்கிய இருவரின் நடவடிக்கைகளால் கட்சிக்குள் அதிருப்தி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெறுவதை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய தேசியக்கட்சி மறுமலர்ச்சித் திட்டத்தை ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்து வரும் நிலையில், பிரிந்து சென்ற முன்னாள் உறுப்பினர்களை மீண்டும் உள்வாங்கவும் முயற்சிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment