தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள போதிலும் மக்கள் நடமாட்டம் கட்டுப்பாடில்லாமல் இருப்பதால் ஊரடங்கினால் பயனுற்றுப் போயுள்ளதாக தெரிவிக்கிறது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்.
மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படாத நிலையில் ஊரடங்கை நீடிப்பதாலும் எவ்வித பயனுமில்லையென சங்கத் தலைவர் உபுல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.
பொறுப்பிலுள்ளவர்கள் இவ்விடயத்தில் கவனமெடுக்கத் தவறினால் நாடு கொரோனாவிலிருந்து விடுபட நீண்ட காலம் எடுக்கும் எனவும் புதிய வகை பிரச்சினைகள் தோன்றும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment