இலங்கைக்கு விமான மூலம் வருவோருக்கு விமான நிலையத்திலேயே பி.சி.ஆர் பரிசோதனை நடாத்தி, மூன்று மணி நேரத்துக்குள் முடிவினை வழங்கும் வகையில் 5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கடந்த சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பரிசோதனை நடவடிக்கைள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.
இயந்திரங்களில் ஏற்பட்ட பழுது காரணமாகவே தற்காலிகமாக பரிசோதனை நடவடிக்கைகள் தடைப்பட்டிருப்பதாகவும் நாளை முதல் மீண்டும் இயங்கும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வருவோர் கட்டாயமாக ஒரு நாள் ஹோட்டலில் தங்கியிருந்து பரிசோதனையை நடாத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு அமுலில் இருந்த போது இடம்பெற்ற துஷ்பிரயோகங்களின் விளைவாகவே சுகாதார அமைச்சின் நேரடி கண்காணிப்பில் விமான நிலையமருகே பரிசோதனை மையம் ஒன்று உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment