பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் உண்மை நிலவரத்தை அறிவது கடினமாகியுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ளார் சுகாதார பரிசோதகர் சங்க தலைவர் உப்புல் ரோஹன.
சுகாதார பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலின் பிரகாரமே பரிசோதனைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இதனூடாக சமூக மட்டத்திலான பரவலை முழுமையாகக் கண்டறிய முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தினசரி ஆயிரக்கணக்கான புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வரும் நிலையில் வெளிநாடுகளில் தொடர்ந்தும் இலங்கை தொடர்பில் எச்சரிக்கை நிலவுகிறது. இப்பின்னணியில் தொற்றாளர் எண்ணிக்கையை குறைத்து வெளியிடும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment