இஸ்லாமிய நாடுகளுக்கிடையிலான கூட்டுறவுக்கான அமைப்பின் பொதுச் செயலாளரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ்.
பலஸ்தீனத்தை அங்கீகரித்த முதன்மையான நாடுகளில் ஒன்று இலங்கையெனவும் இலங்கை முஸ்லிம் நாடுகளுடன் தொடர்ந்து நட்புறவை பேணி வருவதாகவும் இதன் போது பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் பல்லின மக்களின் இருப்பையும் தனித்துவத்தையும் கலாச்சாரங்களையும் பாதுகாக்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஓ.ஐ.சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment