பசில் ராஜபக்சவை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க இடங்கொடுத்து தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தியாகம் செய்த ஜயந்த கெட்டகொட மீண்டும் அப்பதவியை எதிர்பார்க்கிறார்.
மத்திய வங்கி ஆளுனராக நியமனம் பெறுவதன் நிமித்தம் அஜித் நிவாத் கபரால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஜயந்த தனது எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, ஜயந்தவுக்கு மத்திய வங்கியில் உயர் பதவி அல்லது உயர்ஸ்தானிகர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அதனை அவர் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment