நாட்டில் பாரிய பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் போவதாகவும் நாட்டை அபிவிருத்தி செய்யப் போவதாகவும் கூறிக் கொண்டு ஆட்சிபீடமேறியவர்களால் அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கூட வழங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக சாடியுள்ளது ஜே.வி.பி.
எரிவாயு, பால்மாவைக் கூட பெற்றுக் கொள்ள முடியாமல் மக்கள் அவதியுறுவதாகவும் ஆட்சியாளர்களின் சாயம் வெளுத்து விட்டதாகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவிக்கிறார்.
அரசு முன் வைத்த கொள்கைகள் யாவும் பேச்சளவிலேயே நின்று போயுள்ளதோடு நடைமுறைச் சாத்தியமற்ற நிலையில் நாடு தத்தளிப்பதாக அவர் மேலும் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment