நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு போராட்டங்கள்: JVP - sonakar.com

Post Top Ad

Sunday, 12 September 2021

நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு போராட்டங்கள்: JVP

 


கொரோனா பெருந்தொற்றினால் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக முடங்கிப் போயுள்ள மக்கள் மீது மேலதிக சுமைகளை உருவாக்கி, வாழ்க்கைச் செலவை அதிகரித்துள்ள அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு போராட்டங்களை ஏற்பாடு செய்யப் போவதாக தெரிவிக்கிறது ஜே.வி.பி.


அத்தியாவசிய பொருட்களின் விலைகள் வெகுவாக உயர்ந்து மக்கள் எதிர்நோக்கி வரும் இன்னல்கள் தொடர்பில் ஆட்சியாளர்களுக்கு புரிய வைக்கும் வகையில் மக்களை அணி திரட்டி போராட்டங்களை நடாத்தப் போவதாக தெரிவிக்கப்படுகிறது.


கொரோனா முகாமைத்துவம் தவறான கணிப்பீடுகள் ஊடாக பெரும் விளைவுகளை உருவாக்கியுள்ளதாக நிபுணர்கள் விசனம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment