இலங்கையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பிறந்தவுடனேயே தேசிய அடையாள அட்டை இலக்கம் வழங்கும் நடைமுறையைக் கொண்டு வர வேண்டும் என அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்.
பின்னர் 16 வயதானதும் அதே இலக்கத்தில் தேசிய அடையாள அட்டையை வழங்குவதன் ஊடாக பிறப்பிலிருந்தே சமூக உரிமைகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான ஒழுங்கு ஏற்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதனூடாக ஒவ்வொரு குழந்தைக்கும் தேசப்பற்றும் கூடவே வளரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment