லொஹானை கைது செய்யக் கோரி CIDல் முறைப்பாடு! - sonakar.com

Post Top Ad

Thursday, 16 September 2021

லொஹானை கைது செய்யக் கோரி CIDல் முறைப்பாடு!

 


அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாழிட வைத்து, தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள லொஹான் ரத்வத்தையை உடனடியாகக் கைது செய்யுமாறு கோரி குற்றவியல் விசாரணைப் பிரிவில் முறைப்பாடு பதிவாகியுள்ளது.


சிறைக்கைதிகளின் உரிமைகளுக்கான பாதுகாப்பு குழு என்ற அமைப்பு இம்முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளது.


முன்னதாக, லொஹானுக்கு எதிராக விசாரணை நடாத்தவோ கைது செய்யவோ முறைப்பாடு எதுவுமில்லையென பொது மக்கள் பாதுகாப்புக்கான அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment